சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை 14 பேர் மீது வழக்கு பதிவு
சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை 14 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 17, 2025 03:51 AM
திருவனந்தபுரம்:சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு அருகே சந்தேரா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் சிறுவனின் வீட்டுக்கு வந்த ஒருவர், பெற்றோருக்கு தெரியாமல் அவரை அழைத்து செல்ல முயற்சித்தார்.
தற்செயலாக அதை கவனித்த சிறுவனின் தாய், அதுகுறித்து விசாரித்த போது, அந்த நபர் அங்கிருந்து நழுவினார். சந்தேரா போலீஸ் ஸ்டேஷனில் சிறுவனின் தாய் புகார் செய்தார்.
விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. சிறுவன், 'கே செக்ஸ்' என்ற இணையதளத்தில் தன் பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் அந்த சிறுவனை பலரும் தொடர்பு கொண்டு, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள், காசர்கோடு கல்வித்துறை உயர் அதிகாரி, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களை பிடிக்க எஸ்.பி., உத்தரவின்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.