இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு மோசம்: சொல்கிறார் ராகுல்
இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு மோசம்: சொல்கிறார் ராகுல்
UPDATED : நவ 05, 2024 10:39 PM
ADDED : நவ 05, 2024 10:34 PM

ஹைதராபாத்: '' இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு உலகிலேயே மிகவும் மோசமானது,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாடு முழுதும் ஜாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம், அனைவருக்கும் சரிசமமான இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்பதுடன், உண்மையில் யார் ஏழைகளாக உள்ளனர். அவர்களின் சதவீதம் எத்தனை என்பது தெரிய வரும் என வலியுறுத்துகிறார். இதன் மூலம், இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
இந்நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. நாளை முதல் இம்மாத இறுதி வரை இப்பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் ஏற்பாடு செய்து இருந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு உலகிலேயே மிகவும் மோசமானதாக உள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் இலக்கு என்பதை காங்கிரஸ் அகற்றும். இவ்வாறு அவர் கூறினார்.