ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே
ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே
ADDED : ஜூலை 09, 2025 10:25 PM

புதுடில்லி: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டு உள்ளது.
கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் இறந்தனர். விபத்தில், படுகாயடைந்த 10ம் வகுப்பு மாணவர் விஸ்வேஸ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி,
* அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயம்
*ரயில் வாகன போக்குவரத்து 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும்.
*இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
*கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும்
*ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
*லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
*இண்டர்லாக்கிங் கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம்
*அனைத்து ரயில்வே கேட்களை 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.