sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்

/

பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்

பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்

பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்

11


UPDATED : பிப் 17, 2026 10:47 PM

ADDED : பிப் 17, 2026 09:09 PM

Google News

11

UPDATED : பிப் 17, 2026 10:47 PM ADDED : பிப் 17, 2026 09:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பார்க்கும் எல்லா கட்சிகளுடனும் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது. கூட்டணி அமைப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் நல்ல முடிவை சொல்வார்.யாருடன் பேசினோம்; என்ன பேசினோம் என்பதை, தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சியால் சொல்ல முடியாது. முடிவு எட்டப்பட்டதும்தான் சொல்ல முடியும்.

எல்லா கட்சிகளிலும், எங்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர். எல்லா கட்சிகளுடனும் பேசி வருகிறோம். அதில் தவறில்லை. சொல்லப்போனால், பார்க்கும் எல்லா கட்சிகளுடன் பேசி வருகிறோம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி., என, எல்லா கட்சிகளுடனும் பேச்சு நடந்து வருகிறது. முடிவு எட்டப்பட்டதும், அதை ராமதாஸ் அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us