கனிமப்பொருட்கள் மறுசுழற்சி திட்டத்திற்கு ரூ.1,500 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
கனிமப்பொருட்கள் மறுசுழற்சி திட்டத்திற்கு ரூ.1,500 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
ADDED : செப் 03, 2025 09:10 PM

புதுடில்லி: கனிமப் பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கனிமப்பொருட்களின் உள்நாட்டு திறன் மற்றும் விநியோக சங்கிலியின் உறுதியற்ற தன்மையை கட்டமைக்கும் விதமாக, தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் திட்டம் உருவாக்கப்பட்டது. முக்கிய கனிமப்பொருட்களை கண்டறிதல், பிரித்தெடுத்தல், சுரங்க செயல்பாடுகள் ஆகியவை இந்திய தொழிற்துறைக்கு முக்கிய பங்காற்றுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கனிமப் பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை திட்டம் 2025 முதல் 2031 வரை ஆறு ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். பெரிய மறுசுழற்சி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறிய மறுசுழற்சி நிறுவனங்களும் பயனடைய உள்ளன. இந்த சிறு நிறுவனங்களுக்கு திட்ட மானியத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூலதனச் செலவு மானியம்: இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் துணை பயன்பாடுகளுக்கான மூலதனச் செலவில் 20% மானியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
செயல்பாட்டு செலவு மானியம்: 2025-26ம் ஆண்டு மீது அதிகரிக்கும் விற்பனையின் அடிப்படையில் ஒரு ஊக்கத் தொகையாகும். குறிப்பிட்ட விற்பனையின் அடிப்படையில், 2வது ஆண்டில் தகுதியான செலவு மானியத்தில் 40% மற்றும் நிதியாண்டு 2026-27 முதல் நிதியாண்டு 2030-31 வரையிலான 3வது ஆண்டில் மீதமுள்ள 60% வழங்கப்படும்.
பெரிய நிறுவனங்களுக்கு ரூ. 50 கோடி மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு ரூ. 25 கோடி என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.