மக்கள் தொகை மாற்றத்தை தடுப்பதில் மத்திய அரசு உறுதி: அமித்ஷா
மக்கள் தொகை மாற்றத்தை தடுப்பதில் மத்திய அரசு உறுதி: அமித்ஷா
ADDED : ஜூன் 05, 2026 09:15 PM

அகர்தலா: பீஹார், திரிபுரா உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில், சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அதனால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகையில் மாற்றங்களை தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
திரிபுராவில், இந்தியா வங்கதேச எல்லையில்அமைந்துள்ள லங்கமரா சோதனைச்சாவடியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது: திரிபுரா எல்லை நமக்கு முக்கியமானது. திரிபுரா ஆகட்டும், பீஹார் ஆகட்டும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம். இது எங்களின் அசைக்க முடியாத தீர்மானம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டு வைத்த அமித்ஷா பிஎஸ்எப் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: இங்குள்ள மரக்கன்றுகளை வீரர்கள் பாதுகாத்து பராமரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அரசின் திட்டங்களினால் மட்டும் நடக்கவில்லை. இது நமது இயற்கையான பழக்கம்.
இந்த பழக்கம் தான் நம்மை பாதுகாக்கும் நம்மை பாதுகாக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்காக எத்தனை மரங்களை வெட்டினோம் என சிந்திக்க வேண்டும். அதனை காட்டிலும் நி றைய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
