ADDED : ஜூன் 05, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ. 4 லட்சம் இழந்துள்ளனர்.
கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் மொபைல் எண்ணிற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வங்கி கணக்கு அப்டெட் தொடர்பான மொபைல் செயலி வந்துள்ளது. அதை உண்மை என நம்பியவர் அதனை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்து ஏமாற்றி உள்ளனர்.
இதேபோல், நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 13 ஆயிரத்து 800, கருவடிக்குப்பத்தை சேர்ந்த பெண் 25 ஆயிரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண் ஆயிரத்து 200 என 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 4 லட்சத்து 4 ஆயிரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
