குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
குருவிநத்தம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 05, 2026 09:12 PM
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில், தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கரதேவி வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ குறித்து நோக்கவுரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர்கள் கோமளா, சாமுண்டீஸ்வரி, இரிசப்பன், தேவி, நான்சி, திவ்யா, செந்தில் ஆகியோர் பாராட்டி பேசினர்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, முனைவர் அருளரசி, அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக சமூக உளவியல் பயிற்சியாளர்கள் அருண்பிரவீன், ராஜா, உமாமகேஸ்வரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உளவியல் குறித்துக் கருத்துரையாற்றினர்.
உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
