ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதில் உறுதி; சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு மத்திய அரசு வரவேற்பு
ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதில் உறுதி; சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு மத்திய அரசு வரவேற்பு
ADDED : டிச 29, 2025 05:34 PM

புதுடில்லி: ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர் குறித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வரையறையை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் வரவேற்றுள்ளார்.
ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட பழைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. ஆரவல்லி மலைத்தொடர் குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசுபரிந்துரைகளையும், சுரங்கப் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டது. இதனை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் வரவேற்றுள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான உத்தரவை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், சிக்கல்களை ஆய்வு செய்ய ஒரு புதிய குழுவை அமைப்பதையும் நான் வரவேற்கிறேன்.
ஆரவல்லி மலைத்தொடரின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து கோரப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தற்போதைய நிலையில், புதிய சுரங்க குத்தகைகள் அல்லது பழைய சுரங்க குத்தகைகளை புதுப்பிப்பது தொடர்பாக சுரங்கத்திற்கான முழுமையான தடை நீடிக்கிறது. இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

