கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்
கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்
ADDED : டிச 29, 2025 05:22 PM

பெங்களூரு: சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதிலடி தந்துள்ளார்.
பெங்களூரு யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிச.,20ல் அகற்றப்பட்டன.பாதிக்கப்பட்ட மக்கள் புகாரை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வீடு இழந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.கர்நாடகா அரசின் நடவடிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து இருந்தார். அவரின் செயலை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கண்டித்து இருந்தார்.
இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்கீர் காலனிக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது;
கேரள முதல்வர் அரசியல் செய்கிறார். அவர் தேர்தலில் தோற்கப் போகிறார். இது ஒரு உள்ளூர் பிரச்னை. சுகாதாரக் கேடுகளிலிருந்து மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.
அரசு சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூருவில் சேரிகள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. அரசு சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.
இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.

