sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு

/

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு


ADDED : பிப் 05, 2026 08:55 AM

Google News

ADDED : பிப் 05, 2026 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் சாகம் 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

பார்லியில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா எழுப்பிய கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார். அதன்படி, தியேட்டர் வெளியீட்டிற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் படங்களுக்கு, 18 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறும்படங்களுக்கான தணிக்கை சான்று வழங்கும் கால அவகாசம் 3 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டில் 2031 படங்களுக்கும், 2022-23ல் 2,777 படங்களுக்கும், 2023-24ல் 2,837 படங்களுக்கும், 2024-25ல் 2,687 படங்களுக்கும், 2025 முதல் தற்போது வரையில் 2,248 படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2025-26ல் மட்டும் 55 படங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதேபோல, ஜனநாயகன் உள்பட 10 படங்கள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் முறையிட்டுள்ளன.

தவெக தலைவர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பூதாகரமான நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், விரைவில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும் என்று விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us