sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது

/

சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது

சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது

சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது

2


ADDED : பிப் 05, 2026 10:09 AM

Google News

2

ADDED : பிப் 05, 2026 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தினம்திட்டா: சபரிமலை நெய் விற்பனை மோசடி வழக்கில் உதவி அர்ச்சகரும், தேவஸ்தான அதிகாரியுமான சுனில்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்காக விற்கப்படும் 'அடியா சிஷ்டம் நெய்' விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், நெய் விற்பனையில் முறைகேடு மற்றும் கையாடல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிக்கையின்படி, பக்தர்களுக்கு 89,129 நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ததன் மூலம் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.89.12 லட்சம் வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், ரூ.75.45 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் முதற்கட்டமாக ரூ.13.67 லட்சம் முறைகேடு நடந்துள்ளது.

பின்னர், மண்டலப் பூஜைக்காக டிசம்பர் 27ம் தேதி கோவில் நடை அடைத்த பிறகு, 28,550 நெய் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஜனவரி 2ம் தேதி ஆய்வு நடத்திய போது, 5,985 பாக்கெட்டுகள் மட்டும் இருந்துள்ளன. இதனால், 22.56 லட்சம் அளவிலான நெய் பாக்கெட்டுகளை விற்று, கையாடல் செய்தது உறுதியாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் உதவி அர்ச்சகரும், செய் விற்பனை பொறுப்பு அதிகாரியுமான சுனில்குமார் பொட்டியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இதன்மூலம், 13 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சுனில் குமாரை பணியிடை நீக்கம் செய்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us