ADDED : மே 08, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் என்.சி.ஆர்., பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று டில்லியில் அதிகபட்சமாக 37.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது சராசரியை விட இரண்டு டிகிரி குறைவு. குறைந்தபட்ச வெப்பநிலை 24.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது. இது பருவத்தின் சராசரியை விட 0.5 டிகிரி குறைவு.
நாளை லேசான மழை அல்லது துாறலுடன் கூடிய மேகமூட்டமான வானம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

