பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை
ADDED : ஆக 23, 2024 08:01 PM

பெங்களூரு: பாலியல் வழக்கில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா,33. ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி.,யாக இருந்தார்.இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாக ஏப்ரலில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. திடீரென ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
ரேவேண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மே.30-ம் தேதி ஜெர்மனியிலிருந்து பெங்களூரு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இந்த வழக்கில் 123 சாட்சிகளிடம் விசாரிக்கப் பட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை இன்று சிறப்பு புலனாய்வு குழு இன்று ( ஆக.,23) தாக்கல் செய்தது