ADDED : ஜூலை 15, 2025 02:59 AM

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.,க்களுக்கு வருகைப்பதிவில் புதிய முறை அறிமுகமாகிறது.
கூட்டத்தொடர்களில் பங்கேற்க வரும் எம்.பி.,க்கள், 'லாபி'யில் உள்ள, 'டிஜிட்டல்' பலகையில் கையொப்பமிட்டு வருகையை பதிவு செய்வது வழக்கம். சில சமயங்களில் அதிக எம்.பி.,க்கள் கூடுவதால் கூட்டம் அலைமோதும்.
மேலும், சில எம்.பி.,க்கள் வருகையை பதிவு செய்துவிட்டு சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் வெளியே செல்வதும் நடக்கிறது.
இந்நிலையில், இதை தடுக்கும் நோக்கில், வரும் 21ல் துவங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில், வருகைப்பதிவில் எம்.பி.,க்களுக்கு புதிய முறை அறிமுகமாகிறது.
இதன்படி, லாபியில் சென்று வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போடுவதற்கு பதில், எம்.பி.,க்கள் அவரவர் இருக்கைக்குச் சென்று, மின்னணு முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
இந்த முறையை அமல்படுத்துவதில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.