பல ஆயிரம் அடி பாதாள சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி கிடக்கிறதென நில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறாங்க. இந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் தண்ணீர் பஞ்சமே இல்லாமல் மாவட்டம் முழுவதற்கும் சப்ளை செய்யலாம் என்கிறாங்க.
கோல்டு சிட்டியின் நிரந்தர தண்ணீர் தேவைக்கு 'ஆதாரம்' இருந்தும், சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் அரசுகள் கவனம் செலுத்தல என்பது ஊர் ஜனம் பேச்சு.
மைனிங் சென்ட்ரல் வசம் இருப்பதால், இது நம்ம வரம்புக்கு உட்பட்டதல்ல என்று ஸ்டேட் கூறி வருகிறது. எரகோள் அணை நீரை பெற்று தரவில்லை. மக்களால் நான், மக்களுக்காக நான். என்ற மக்களின் அதிகாரம் பெற்றவங்க மவுனமா இருக்காங்களாம்.
தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்ற யார் முன்வரப் போறாங்களோ.
கோல்டு சிட்டி -- பார்க் சிட்டி செல்லும் ரயிலின் பெட்டிகள் குறைச்சதால், ப.பேட்டை பயணியர் தான் மறியல் நடத்தி அதிர வெச்சாங்க. ரயிலில் இருந்து இறங்கி கோல்டு சிட்டி பயணியரும் கலந்துக்கிட்டாங்க.
போராடினவங்களிடம் வழக்கு போடுவதாக ரயில்வே காக்கிகள் மிரட்டினாங்க. ஆனா, அவங்க பயப்படலை.
புல்லுக்கட்டு செங்கோட்டைக்காரர் மண்டல ரயில்வே பெரிய ஆபீசரிடம் பேசி நிலைமையை விளக்கினாரு. அவரும் பயணியர் நெருக்கடியை கவனித்து, 12 பெட்டிகளாக இயக்குவதா உறுதி அளித்தாரு. அது வீடியோவில் வைரலானது.
அதுக்கப்புறம் அடுத்த நாள் கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரர், அதே அதிகாரியை சந்தித்து ரயில் பெட்டிகள் குறைத்தது பற்றி பேசியதாக படங்கள் வெளியிடப் பட்டன. இது டூ லேட்.
அந்த மேடம் பேசி 16 பெட்டிகளாக பழைய படி இயக்க செய்திருந்தால் 'சபாஷ்' சொல்லலாமே. ஆனாக யாரோ கொளுத்தின நெருப்பில குளிர் காயலாமான்னு பயணியர் கேக்குறாங்க.
கோலார் மாவட்டத்தில் உயிருடன் விளையாடி வந்த 148 போலி கிளினிக்குகள் பற்றி புகார்கள், அரசு கதவை தட்டின. இதனால் 125 கிளினிக்குகள் மீது வழக்கு பதிவு செஞ்சதாக அறிவிச்சாங்க.
அத்தகைய கிளினிக்குகளை மீண்டும் திறக்க விடாமல் மூடினாங்களா. போலி டாக்டர்களை கம்பி எண்ண வெச்சாங்களான்னு ஒண்ணும் தெரியலையே.
போலிகளிடம் பேரம் பேசி காப்பாற்றினதா தகவல் பரவியது. பொறுப்பான மக்கள் பிரதிநிதியிடம் சில சமூக ஆர்வலர்கள் சொல்லி இருக்காங்க. அவரோ, கிளினிக்குகளால் யாருக்கு என்ன கெடுதி ஏற்பட்டது. அவசர உதவியாக இருக்கட்டுமேன்னு பதில் சொல்லி இருக்காரு.
பல லட்சம் ரூபாய் செலவிட்டு படிக்கிற எம்.பி.பி.எஸ்., படிப்பின் மகத்துவம் தெரியாமல் இருக்கிறவங்களால் தான் போலிகள் அதிகரிக்கிறாங்களே.
கோலார் மாவட்டத்தில் நகர வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மாநில நகர வளர்ச்சித்துறை
387 'சி' நிதி வழங்கினதா பொறுப்பு மந்திரி பெருமை பேசியிருக்கிறாரு. இதுல, கோல்டு சிட்டி வளர்ச்சிக்குக்கு எத்தனை கோடி கண்ணில காட்டினாங்க. முனிசி., நிதி 4 சி யில நகரம் முழுதும் எல்.இ.டி., களை மினிக்கிட செஞ்சாங்க.
ஆனா, சாலை அகலப்படுத்தின இடத்தில் தார் பூசாம ஜல்லிகளை கொட்டி வெச்சிருக்காங்களே. இதை எப்போ சீர் செய்ய போறாங்க. ஹார்ட் ஆப் த சிட்டி சாலையே, குண்டும் குழியுமாக தான் கிடக்குது. அந்த மந்திரி, ஒருதரம் கோல்ட் சிட்டியை சுற்றி பார்க்க வரணுமே.

