sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அர்ஜுனன் கட்டிய சென்னகேசவா கோவில்

/

அர்ஜுனன் கட்டிய சென்னகேசவா கோவில்

அர்ஜுனன் கட்டிய சென்னகேசவா கோவில்

அர்ஜுனன் கட்டிய சென்னகேசவா கோவில்

2


ADDED : ஜன 21, 2025 07:23 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு நகரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் கர்நாடகா - தமிழகம் எல்லையான ஆனேக்கல்லில் அமைந்து உள்ளது சென்னகேசவா கோவில்.

புராணங்களின்படி, மஹாபாரத போர் முடிந்தபின், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், இங்கு விஷ்ணுவுக்கு சிறிய கோவில் கட்டினார். பின், அமைதிக்காகவும், அவரின் பரத வம்சம் நிலைத்திருக்கவும் பிரார்த்தனை செய்தார்.

இப்போது இப்பகுதியில் உள்ள மக்கள், 1603ல் அங்கு குடியேறிய சுகதுார் குடும்பத்தை சேர்ந்த சிக்கதம்மா கவுடாவின் வழித்தோன்றல்கள். இப்பகுதியை மைசூரு மன்னர் குடும்பம், தங்கள் ராஜ்ஜியத்துடன் இணைத்து கொண்டது. தற்போது இக்கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவில் கட்டட கலையை பார்க்கும் போது, விஜயநகர பேரரசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது தெரியும். விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக இருந்தாலும், சில பகுதிகள் திராவிட கட்டட கலையிலும் கட்டப்பட்டு உள்ளன.

அவதாரங்கள்


கோவிலில் உள்ள பெரிய துாணில், ராமாயணம் தொடர்பான காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இரண்டாவது துாணில், விஷ்ணுவின் யோக நரசிம்மர், வராஹ அவதாரமும்; மூன்றாவது துாணில் ஹனுமன், காமதேனு சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது துாணில், பாலராமர், வாலி, சுக்ரீவா சிற்பங்கள் உள்ளன. கருவறையில் மஹா விஷ்ணு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

மிக குறைந்த தொல்பொருள் சான்றுகள் இருந்தாலும், கோவில் மிகவும் பழமையான, முக்கியமான கட்டடமாக நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் சில பழங்கால செழிப்பான குடியேற்றத்துக்கு சான்றாக இருந்த சாம்பல் மேடுகள் அனைத்தும், உள்ளூர் மக்கள், வயலுக்கு உரமாக பயன்படுத்தி கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அருகில், பிக்னிக் ஸ்பாட்கள் நிறைய உள்ளன.

எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனம் அல்லது காரில், ஒரு மணி நேரத்தில் ஆனேக்கல் சென்று விடலாம்

. - நமது நிருபர் -






      Dinamalar
      Follow us