சத்தீஸ்கரில் கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்; 3 பேர் படுகாயம்
சத்தீஸ்கரில் கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்; 3 பேர் படுகாயம்
ADDED : ஆக 18, 2025 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஜபூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி மாநில ரிசர்வ் படை வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
பிஜபூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் சத்தீஸ்கர் மாநில போலீசாரின் பாதுகாப்பு படை வீரர்கள், மாவோயிஸ்டுகள் தடுப்பு பணிகளை நேற்று தொடங்கினர். 2வது நாளாக நீடித்த இந்த ஆபரேஷனில், இன்று காலை மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் தினேஷ் நாக் உயிரிழந்தார்.
மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே, கடந்த 14ம் தேதி பிஜபூரில் நிகழ்ந்த கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்து இருந்தார்.