ADDED : ஆக 07, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:''டில்லியை பாதுகாத்து, அதன் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லியில் நேற்று அவர் தன் முகாம் அலுவலகத்தில், பள்ளிக் குழந்தைகளுடன் ரக் ஷா பந்தன் விழாவை கொண்டாடினார். டில்லி முதல்வராக கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக ரக் ஷா பந்தன் விழாவை கொண்டாடும் முதல்வருக்கு, பள்ளிக்குழந்தைகள் ரக் ஷா பந்தன் கயிற்றை அவர் கையில் கட்டி மகிழ்ந்தன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரேகா குப்தா,''டில்லியை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்நகரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.
இது தான் முதல்வராக பொறுப்பேற்ற பின் நடக்கவிருக்கும் முதல், ரக் ஷா பந்தன் விழா. இந்த விழா, அன்பையும், பாசத்தையும் வெளிக்காட்டுகிறது,'' என்றார்.