ADDED : செப் 28, 2024 07:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானாவில், அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒன்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் ரிடாவ் கிராமத்தில் அனுமதி பெறாமல் ஒருவர் பட்டாசு ஆலை நடத்தினார். இங்கு நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. திடீரென, வெடிமருந்து தீப்பற்றி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. கட்டடம் முழுதும் தீப்பற்றி எரிந்தது.
ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு, ரோஹ்தக் பி.ஜி.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.