ADDED : டிச 08, 2025 01:20 AM

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக சுமார் 8,600 பேர் வரையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்துமாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசு வரும் 2030 ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 35 மாவட்டங்களிலும் வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் இது குறித்து முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்துள்ளது. வங்காள மொழி பேசுபவர்கள் மற்றும்பழங்குடியினர் அதிகம் வசிக்கும்பகுதிகளில் இத்தகைய திருமணம் நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-2024 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட 30 மாவட்டங்களில் சுமார் 8.17 சதவீதம் அளவிற்கு குழந்தை திருமணம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இதற்கு காரணமாக இருந்ததாக சுமார் 8,600 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு முதல்வர் கூறினார்.
இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த புவன் ரிபு என்பவர் கூறுகையில் மாநிலம் முழுவதும் உள்ள 250 மேற்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் மூலம் மாவட்ட மற்றும் கிராமங்களில் கிராம பஞ்., மற்றும் நகராட்சி வார்டுகளில் மூன்று கட்டங்களாக கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

