ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வர் பதவிக்கு வருகின்றனர் பஞ்சாப் 'மாஜி' அமைச்சர் சித்து மனைவி 'பகீர்'
ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வர் பதவிக்கு வருகின்றனர் பஞ்சாப் 'மாஜி' அமைச்சர் சித்து மனைவி 'பகீர்'
ADDED : டிச 08, 2025 12:10 AM

சண்டிகர்: “பஞ்சாபில், 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் நாற்காலியில் அமர்கின்றனர். 2027 சட்ட சபை தேர்தலில், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்பட்டால், தீவிர அரசியலுக்கு திரும்புவார்,” என, அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியிடம் காங்., ஆட்சியை பறிகொடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, முந்தைய காங்., அரசில், மாநில அமைச்சராகவும், மாநில காங்., தலைவராகவும் பதவி வகித்தார்.
சட் டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்த அவர், 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை.
காங்., லோக்சபா எம்.பி., பிரியங்காவுக்கு நெருக்கமானவராக, நவ்ஜோத் சிங் சித்து அறியப்படுகிறார். இந்நிலையில், சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவை முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சமீபத்தில் சந்தித்து பேசினார்.
இ தன்பின், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. இது தொடர்பாகவும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் கவர்னரிடம் பேசினேன். பஞ்சாப் மற்றும் அதன் மக்களுக்காக நாம் எப்போதும் குரல் கொடுக்கிறோம்.
ஆனால் பஞ்சாபில், 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் நாற்காலியில் அமர்கின்றனர்.
இது எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. எந்த கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களி டம் பணம் இல்லை. ஆட்சி அதிகாரத்தை என் கணவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் கொடுத்தால், பஞ்சாபை வளர்ச்சி அடைந்த பொன்னான மாநிலமாக மாற்றி காட்டுவார்.
பஞ் சாப் காங்கிரசில் உட்கட்சி பூசல் உள்ளது. கட்சியின் முதல்வர் வேட்பாளராவதில் ஐந்து தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது. அவர்கள் நிச்சயம் நவ்ஜோத் சிங்கை முன்னேற விடமா ட்டார்கள். இதை காங்., மேலிடம் கவனத்தில் கொள்ள வேண் டும்.
பஞ்சாபில், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், நவ்ஜோத் சிங் சித்து நிச்சயம் தீவிர அரசியலுக்கு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

