தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பயங்கரவாதிகளுக்கு உதவியதா சீனா?: பஹல்காம் தாக்குதல் கேமரா விவகாரத்தில் இந்தியா கேட்ட தகவலுக்கு பதில் இல்லை

பயங்கரவாதிகளுக்கு உதவியதா சீனா?: பஹல்காம் தாக்குதல் கேமரா விவகாரத்தில் இந்தியா கேட்ட தகவலுக்கு பதில் இல்லை

பயங்கரவாதிகளுக்கு உதவியதா சீனா?: பஹல்காம் தாக்குதல் கேமரா விவகாரத்தில் இந்தியா கேட்ட தகவலுக்கு பதில் இல்லை


ADDED : நவ 21, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த 2025ம் ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட, அமெரிக்கத் தயாரிப்பான கோ-புரோ கேமரா குறித்து இந்தியா கோரிய தகவல்களுக்கு, சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 2025 ஏப்., 22ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.

இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தது.

​இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூன்று பேரும், கடந்த 2025 ஜூலையில் ஸ்ரீநகர் புறநகரில் உள்ள வனப்பகுதியில், என்கவுன்டர் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 'கோ-புரோ' ஆக் ஷன் கேமரா ஒன்று கைப்பற்றப்பட்டது.

​சீனத் தொடர்பு:


இந்த கேமரா குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதன் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் 'கோ-புரோ இன்க்' நிறுவனத்திடம் விசாரித்தனர். கேமரா சீனாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வணிக விநியோகஸ்தர் ஒருவருக்கு விற்றது அதில் தெரியவந்தது. ​சீன விநியோகஸ்தரிடம் இருந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைக்கு இந்த கேமரா எப்படிச் சென்றது என்பது குறித்தும், பாகிஸ்தான் ராணுவம் இதனை வாங்கி பயங்கரவாதிகளுக்குக் கொடுத்ததா என்பது குறித்தும் என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

​இது குறித்து என்.ஐ.ஏ., தலைமை இயக்குநர் ராகேஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛இந்த கேமரா குறித்த விவரங்களைக் கோரி சீனாவிடம் தகவல் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இருப்பினும், எங்களிடம் முக்கிய தடயவியல் ஆதாரங்கள் உள்ளன,' என்றார். சீனாவுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் இல்லாததால், தூதரக ரீதியாக இந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

​சீனத் துப்பாக்கி மீட்பு:


கேமரா மட்டுமின்றி, பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு ஏ.கே.,47 துப்பாக்கிகளும், டச்சிகாம் என்கவுன்ட்டர் இடத்தில் மீட்கப்பட்ட மற்றொரு துப்பாக்கியும் சீனத் தயாரிப்பு என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, அதன் தளபதி சஜித் ஜாட், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பைசல் ஜாட், ஹபீப் தாஹிர், ஹம்சா ஆப்கானி மற்றும் அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் அளித்து உதவிய உள்ளூர்வாசிகள் பஷீர் அகமது ஜோதாத், பர்வைஸ் அகமது ஆகிய 6 பேர் மீது என்.ஐ.ஏ., ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us