சீனா அத்துமீறுது... மத்திய அரசு அமைதி காக்குது: பிரியங்கா பேச்சு
சீனா அத்துமீறுது... மத்திய அரசு அமைதி காக்குது: பிரியங்கா பேச்சு
UPDATED : ஏப் 20, 2024 03:35 PM
ADDED : ஏப் 20, 2024 03:34 PM

திருவனந்தபுரம்: 'சீனாவின் அத்துமீறல் தொடர்பாக லடாக்கில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து மத்திய அரசு அமைதியாக உள்ளது' என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார்.
கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: ஜனநாயக நடைமுறையை மீறி மத்திய அரசு சட்டங்களை இயற்றுகிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் ரத்தத்தால் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பை மாற்றியமைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திரங்கள்
சீனாவின் அத்துமீறல் தொடர்பாக லடாக்கில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து மத்திய அரசு அமைதியாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜ., அரசு பணத்தை பெற்றது. பா.ஜ.,வுக்கு எதிராகப் பேசத் துணிந்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பொய் வழக்கு போட்டு, எதிர்ப்பவர்களை பா.ஜ., சிறையில் அடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

