பூட்டானை கபளீகரம் செய்யும் சீனா; அரச குடும்ப நிலமும் ஆக்கிரமிப்பு
பூட்டானை கபளீகரம் செய்யும் சீனா; அரச குடும்ப நிலமும் ஆக்கிரமிப்பு
UPDATED : ஜன 07, 2024 03:30 AM
ADDED : ஜன 07, 2024 02:15 AM

புதுடில்லி நம் அண்டை நாடான பூட்டான், நிலப்பரப்பில் நம் தலைநகர் புதுடில்லியைவிட சிறியது. தன் நாட்டை ஒட்டியுள்ள நாடுகளில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பூட்டானையும் ஆக்கிரமித்து வருகிறது. பூட்டானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீனா ஆக்கிரமித்து வந்தது. அங்கு புதிய கட்டடங்களை கட்டி வருகிறது.
இந்நிலையில், பெயுல் கென்பஜாங்க் எனப்படும் கலாசார தொடர்புடைய நிலப்பகுதியை, சீனா தற்போது ஆக்கிரமித்து வருகிறது. அங்குள்ள ஏரியை ஒட்டியுள்ள இடங்களில் பல குடியிருப்பு கட்டடங்களை கட்டி வருகிறது.
மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது, அங்கு கட்டடங்கள் கட்டி, தன் நாட்டு மக்களை அங்கு குடியமர்த்தும் பாணியை சீனா பின்பற்றி வருகிறது. அதுபோல இந்தப் பகுதியிலும் கட்டுமானப் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது, 'சாட்டிலைட்' படங்கள் வாயிலாக தெரிய வந்துஉள்ளது.
இந்தப் பகுதி, பூட்டான் அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத நிலையில் பூட்டான் உள்ளது.
பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.