sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினி கடலை

/

சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : ஜன 24, 2025 07:07 AM

Google News

ADDED : ஜன 24, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1980 காலகட்ட கதை!

நடிகர் துனியா விஜய் நடிக்கும், 'லேண்ட் லார்டு' திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. பெங்களூரு, நெலமங்களாவின், பரதிபெட்டா மலை அடிவாரத்தில், கிராமத்தை போன்ற செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

கதை குறித்து துனியா விஜய் கூறுகையில், இந்த படத்தில் நான் 51 வயது கிராமத்து நபராக, ஏழைகளுக்காக போராடுபவனாக நடிக்கிறேன். என் மகள் ரிதன்யா, இப்படத்திலும் என் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது கோலாரில் நடக்கும் கதையாகும். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதை. இதில் நாயகனின் பெயர் ராச்சையா. படப்பிடிப்பு செட்டிலேயே என் பிறந்த நாளை கொண்டாடியது, எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அடுத்தாண்டு ரசிகர்களுடன் கொண்டாடுவேன், என்றார்.

பல ஆண்டு தயாரான கதை!

'ஒந்து ஷிகாரிய கதே' திரைப்படத்தை இயக்கிய சச்சின் ஷெட்டி, தற்போது 'சமுத்ர மந்தனா' என்ற படத்தை இயக்குகிறார். கதை குறித்து, படக்குழுவினரிடம் கேட்ட போது, 'இது சஸ்பென்ஸ், திரில்லர் கதை கொண்டதாகும். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இன்றைய காலத்தில் வெயிட்டான கதையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதே போன்று திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

'திரைக்கதையை உருவாக்க பல ஆண்டுகள் எடுத்து கொண்டோம். யஷ்வந்த் குமார், மந்தாரா பட்டலஹள்ளி நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் கன்னடத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர்கள். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம்' என்றனர்.

பெர்லின் விழாவில் திரையீடு!

நடேஷ் ஹெக்டே இயக்கிய கன்னட திரைப்படம், 'வாகசபானி' பர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவுக்கு தேர்வான முதல் கன்னட படம் இதுதான். இதை பற்றி இயக்குனர் நடேஷ் ஹெக்டே கூறுகையில், 'பிப்ரவரி 13 முதல் 23 வரை பெர்லினில் நடக்கும் திரைப்பட விழாவில், 'வாகசபானி' திரையிடப்படுகிறது.

''இது நான் இயக்கிய இரண்டாவது படமாகும். முதலில் ரிஷப் ஷெட்டி தயாரிக்க முன் வந்தார். ஆனால் அவர் தற்போது 'காந்தாரா 2' படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், எங்கள் படத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இது தலித் பெண்ணை பற்றிய கதையாகும். மலையாள இயக்குனர் திலீஷ் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், என்றார்.

3 மொழிகளில் வெளியீடு!

'மாங்க் தி யங்' திரைப்படம், பிப்ரவரியில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் டைட்டிலே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'கன்னடம் உட்பட மூன்று மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல் யு டியூபில் வெளியாகி, மக்களிடம் வரவேற்பை பெற்றது. படத்தை ஐந்து பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்கள். படத்தின் கதை 1869 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். படத்துக்கு சுவாமிநாதன் இசை அமைத்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதையாகும். நாயகியாக சவுந்தர்யா கவுடா நடித்துள்ளார்' என்றனர்.

தாயை நினைவுகூரும் படம்!

நடிகர் விராட், 'கிஸ்' திரைப்படம் மூலம், கன்னட திரையுலகில் அறிமுகமானவர். ஐந்து ஆண்டுகளுக்கு பின், 'ராயல்' என்ற படத்தில் நடித்துள்ளார். தினகர் துாகுதீப் இயக்கும் இந்த திரைப்படம், இன்று திரைக்கு வருகிறது.

கதை குறித்து விராட் கூறுகையில், ''என் கதாபாத்திரத்தை இயக்குனர் சிறப்பாக வடிவமைத்துள்ளார். படத்தை பார்க்கும் அனைவரும், தங்கள் தாயை நினைவுகூர்வர். மனஸ்தாபம் இருந்தாலும் அதை மறந்து, தாய்க்கு போன் செய்து பேசுவர். இது குடும்ப பாசம், ஆக்ஷன், காதல் என, அனைத்தும் உள்ள படமாகும். ஆக்ஷன் படம் என்பதால் பல சாகச கலைகளை கற்று, என்னை தயார் செய்து படப்பிடிப்பில் பங்கேற்றேன், என்றார்.

மீண்டும் நடிக்க வருவாரா?

கன்னட திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா. நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர், அரசியலுக்கு சென்றார். இப்போது அரசியலிலும் இல்லை. இவரை திரையில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. நடிக்க வேண்டும் என, ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். ஆனால், பட தயாரிப்பில் ஆர்வம் காட்டுகிறாரே தவிர, நடிக்கவில்லை. இது பற்றி ரம்யாவிடம் கேட்ட போது, நல்ல கதை, கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்,'' என்றார். இதையே தான் அவ்வப்போது கூறுகிறார்.






      Dinamalar
      Follow us