துணை ஜனாதிபதி இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விருந்தளித்து சிபிஆர் கவுரவிப்பு
துணை ஜனாதிபதி இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விருந்தளித்து சிபிஆர் கவுரவிப்பு
ADDED : டிச 19, 2025 09:20 PM

புதுடில்லி: கிறிஸ்துமஸை முன்னிட்டு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று( டிச.,19) அவரது இல்லத்தில் விருந்தளித்தார்.
டில்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நடந்த விருந்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கிறிஸ்துமஸ் என்பது அன்பு,நம்பிக்கை மற்றும் கொடை ஆகியவற்றின் செய்தியை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸின் உணர்வை அன்றாட வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் மற்றும் பழங்குடி சமூகங்களின் மேம்பாடு உள்ளிட்ட நாட்டை மேம்படுத்துவதில் கிறிஸ்தவ சமூகம் ஆற்றிய பங்கு விலை மதிப்பற்றது. நாட்டை கட்டியெழுப்புவதில், கிறிஸ்தவ சமூகம் அதன் மதிப்புமிக்க பங்களிப்பைத் தொடர வேண்டும்.
பிரதமர் மோடியின் கொள்கையான 2047 க்குள் வளர்ந்த தேசம் என்ற இலக்கை அடைய சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் கூட்டு முயற்சி தேவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மத்திய இணையமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், சுரேஷ் கோபி மற்றும் கார்டினல்கள், பேராயர்கள், பாதிரியார்கள், போதகர்கள், பாதரியார்கள், பல்வேறு திருச்சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

