sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினி பெங்களூரு

/

சினி பெங்களூரு

சினி பெங்களூரு

சினி பெங்களூரு


ADDED : ஜன 13, 2024 11:07 PM

Google News

ADDED : ஜன 13, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்ப்புக்காக தவிப்பு

கன்னட நடிகைகள் ரஷ்மிகா மந்தண்ணா, ஷிரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலாவை தொடர்ந்து, நடிகை சப்தமி கவுடாவும் தெலுங்குக்கு தாவியுள்ளார். இவர் பாலிவுட் படம் மூலமாக திரையுலகில் நுழைந்தவர். இதுகுறித்து, அவர் கூறுகையில், “தெலுங்கு திரையுலகில் நுழைந்தது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு குதிரை சவாரி போன்ற, புதிய திறமைகளை வளர்க்க வாய்ப்பளித்தது. மொழியை தவிர்த்து நல்ல சினிமாக்களை கொடுப்பது, எனக்கு திருப்தி அளிக்கிறது. நான் நடிக்கும் தெலுங்கு படம், தம்முடு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். கன்னடத்தையும் நான் மறக்கவில்லை. நான் நடித்துள்ள யுவா படம் நடப்பாண்டு மார்ச் 28ல், திரைக்கு வருகிறது. கன்னடத்தில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.

ஆல்பத்தில் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் கிஷோர் சந்திரா, நடிப்பில் மட்டுமின்றி, மியூசிக் ஆல்பத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். இவர் தற்போது அயர்லாந்தில் கிரியேடிவ் ஆர்ட்ஸ் கற்று வருகிறார். மியூசிக் ஆல்பம் குறித்து, அவரிடம் கேட்ட போது, “வெளிநாடு வாழ் இந்தியரான தீபக், கனடாவில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர் தயாரித்துள்ள மியூசிக் ஆல்பத்தில் நான் நடித்துள்ளேன். புலிகள், சிங்கங்கள், யானைகள் சர்க்கசில் பயிற்சி பெறுகின்றன. மக்களை மகிழ்விக்கின்றன. ஆனால், ஓநாய் இதை செய்வதில்லை. ஓநாய் மிகவும் புத்திசாலி பிராணி. உண்மையான போராட்டக்காரன், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான். இதுவே பாடலின் கருத்தாகும். பாடல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்,” என்றார்.

சித்தராமையா திரைப்படம்

முதல்வர் சித்தராமையா வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தயாராகிறது. லீடர் ராமையா என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை, சத்யரத்னம் இயக்குகிறார். சிறுவயது சித்தராமையாவாக மாஸ்டர் ஆகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 9வது வகுப்பு படிக்கும் இவர், தன் நடிப்பு திறமையால் பட வாய்ப்புகள் பெறுகிறார். தற்போது நான்கு படங்களை கையில் வைத்துள்ளார். ஆகாஷ் கூறுகையில், “சிறு வயதில் இருந்தே, சினிமா உலகம் என்னை ஈர்க்கிறது. பெற்றோரும் எனக்கு ஒத்துழைப்பு தந்துள்ளனர். ஸ்டன்ட் மாஸ்டர் திரில்லர் மஞ்சுவிடம் ஸ்டன்டும், இயக்குனர் லக்கி சங்கரிடம் நடிப்பையும் கற்கிறேன். நடிப்புக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்கிறேன்,” என்றார்.

படப்பிடிப்பில் பாடம்

தியா படத்தில் தன் நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை குஷி ரவி. தற்போது இவர் கேஸ் ஆப் கொன்டானா படத்தில் நடித்துள்ளார். இது வரும் 26ல், திரைக்கு வருகிறது. இது குறித்து, அவர், “இப்போதே முதன்முறையாக, விஜய ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். படத்தில் சஹனா என்ற டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை உள்ள கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். விஜய ராகவேந்திரா திறமையான கலைஞர். ஒரு கதாபாத்திரத்துக்கு எப்படி உயிர் கொடுக்க வேண்டும் என்பது, அவருக்கு தெரியும். சக கலைஞர்களை ஊக்குவித்து, அவர்கள் நன்றாக நடிக்கும்படி செய்தார். படப்பிடிப்பின் போது, அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்,” என்றார்.

திரில்லர் மூவி

ஆதித்யா, ரஞ்சனி ராகவன் ஜோடியாக நடிக்கும், கங்காரு திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. பெங்களூரு, சிக்கமகளூரு, ஹொரநாடு உட்பட, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படக்குழுவினர் கூறுகையில், கங்காரு திரைப்படம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாராகிறது. சஸ்பென்ஸ், திரில்லிங் கதை கொண்டது. படத்தின் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும். இதில் ஆதித்யா போலீஸ் அதிகாரியாகவும், ரஞ்சனி ராகவன் சைக்கியாட்ரிஸ்டாகவும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பிரபல நகைச்சுவை நடிகர் சாது கோகிலா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடங்களும் அற்புதமாக வந்துள்ளன' என்றார்.

வெளிநாட்டு நிறுவனம்

ரூபா ராவ் தயாரித்து, சஹதேவ் கெலவடி இயக்கிய கென்டா படத்தின் வினியோக உரிமையை கில்ஜாய் பிலிம்ஸ் பெற்றுள்ளது. இது பற்றி தயாரிப்பாளர் ரூபா ராவ் கூறுகையில், “நியூயார்க் மற்றும் பெர்லினை சேர்ந்த இந்நிறுவனம் ஆஸ்கர் விருது பெற்ற பல படங்களை தயாரித்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு, எங்கள் சினிமாவை கொண்டு செல்லவும், வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இது புது முயற்சியாகும். வெவ்வேறு நாடுகளின் மொழிகளில், படத்தை டப்பிங் செய்து வெளியிட ஆலோசிக்கிறோம். இந்த படத்தில் நடித்துள்ள பெரும்பாலானோர், நாடக பின்னணி கொண்டவர்கள்,” என்றார்.






      Dinamalar
      Follow us