சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா; 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்!
சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா; 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்!
ADDED : ஆக 24, 2024 06:42 AM

புதுடில்லி: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 1130 கான்ஸ்டபிள் ( தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 39 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.
சி.ஐ.எஸ்.எப்., என்று அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள் (தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்வெளி ஆய்வு மையம், துறைமுகம், ஏர்போர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்துவது வழக்கம்.
தற்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள் (தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 466 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 114 இடங்களும், எஸ் சி பிரிவினருக்கு 161 இடங்களும், எஸ் டி பிரிவினருக்கு 161 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி என்ன?
* 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயதுவரம்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
* எஸ்.சி,எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்றவர்கள், பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100.
தேர்வு செய்வது எப்படி?
எழுத்து தேர்வு, உடல் தகுதி, உடல் திறன் (PET/ PST), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30. மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.