குடியுரிமை சட்டம்: விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் துவக்கம்
குடியுரிமை சட்டம்: விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் துவக்கம்
ADDED : மார் 12, 2024 01:19 PM

புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலான நிலையில், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. விரைவில் மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டிற்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டம் 2019 ல் கொண்டு வரப்பட்டது. பல சர்ச்கைள், எதிர்ப்புகளை சந்தித்த, சிஏஏ சட்டத்துக்கான விதிகளை, மத்திய அரசு நேற்று( மார்ச் 11) வெளியிட்டது. இது உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் அகதிகளாக வந்தவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. குடியுரிமை வேண்டுவோர் indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், விரைவில் மொபைல்போன் செயலி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்து உள்ளது.

