குடியுரிமை திருத்த மசோதா: ராகுலுக்கு பினராயி விஜயன் கேள்வி
குடியுரிமை திருத்த மசோதா: ராகுலுக்கு பினராயி விஜயன் கேள்வி
ADDED : ஏப் 17, 2024 08:09 PM

பாலக்காடு: குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் கருத்து சொல்லாதது ஏன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி பாலக்காடு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பின் கேரள கம்யூ.முதல்வர் பினராயி விஜயன் கூறியது,
காங். எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த மசோதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல். அப்போதும் கூட செய்தியாளர்கள் சந்திப்பின் போது குடியுரிமை திருத்த மசோதா குறித்து தனது கருத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி வரை வாய்திறக்கவில்லை. கருத்து சொல்லவிடமால் அவரை தடுத்தது யார் ? இவ்வாறு பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

