தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஹரியானாவில் எல்.கே.ஜி., மாணவியை கல்லால் தாக்கிய 3ம் வகுப்பு சிறுவன்

ஹரியானாவில் எல்.கே.ஜி., மாணவியை கல்லால் தாக்கிய 3ம் வகுப்பு சிறுவன்

ஹரியானாவில் எல்.கே.ஜி., மாணவியை கல்லால் தாக்கிய 3ம் வகுப்பு சிறுவன்


UPDATED : அக் 31, 2026 08:08 PM

ADDED : அக் 31, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 08:08 PM ADDED : அக் 31, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஞ்ச்குலா: ஹரியானாவின் பஞ்ச்குலா பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், சிறப்புத் தேவைகள் கொண்ட எல்.கே.ஜி., மாணவி படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் பஞ்ச்குலாவின் செக்டார் 20 பகுதியில் உள்ள அரசு மாடல் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, கடந்த அக்., 28ம் தேதி சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான எல்.கே.ஜி., வகுப்பில் படிக்கும் 6 வயது சிறுமியை, அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் தனி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு அச்சிறுமி மீது கற்கள், செங்கல் மற்றும் பூந்தொட்டியால் சிறுவன் தாக்கி உள்ளான். இதில், அந்தச் சிறுமி படுகாயமடைந்து மயங்கி விழுந்தாள். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியின் முகத்தில் பலத்த காயங்களும், மூக்கில் எலும்பு முறிவும் ஏற்பட்டது தெரியவந்தது. தற்போது, சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும், சிறுமியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டிய நிலையில், போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனின் குடும்பத்தினர், பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, தாக்குதல் நடத்திய சிறுவனின் மனநிலை குறித்தும் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, ஹரியானா அரசு உயர்மட்ட விசாரணை குழு அமைத்துள்ளது. இதேபோல் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us