உள்ளடக்கத்திற்கு செல்ல

10 நாட்களுக்கு வகுப்பு ரத்து; தேர்வுகள் ஒத்திவைப்பு
10 நாட்களுக்கு வகுப்பு ரத்து; தேர்வுகள் ஒத்திவைப்பு
ADDED : செப் 28, 2026 01:42 PM

அ நிறம் | அளவு
-நமது நிருபர்-
பஞ்சாப் மாநிலம் பாக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்தது. இதையடுத்து பல்கலை வெளியிட்ட அறிவிப்பில், செப்.28 முதல் 10 நாட்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடைபெறாது என்றும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்வுகளுக்கான அட்டவனை பல்கலைக்கழக மேலாண்மை அமைப்பு மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் ஆலோசித்து சொந்த ஊருக்கு செல்லலாம். விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்களது அறைகளிலேயே இருக்கவும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
