நிலக்கரி சுரங்க பணியாளர்கள் அருணாசல பிரதேசத்தில் கடத்தல்
நிலக்கரி சுரங்க பணியாளர்கள் அருணாசல பிரதேசத்தில் கடத்தல்
UPDATED : பிப் 20, 2024 04:46 AM
ADDED : பிப் 20, 2024 01:33 AM

தின்சுகியா: அருணாசல பிரதேசத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்த அசாம் தொழிலாளர்கள் மூன்று பேரை, அங்குள்ள ஒரு கும்பல் கடத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில், சங்லாங் மாவட்டத்தின் பெப்ரு பஸ்தி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஞான் தாபா, லேஹான் போரா, சந்தன் நர்சாரி ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர், அந்த சுரங்கத்திற்குள் நுழைந்து அவர்களை கடத்தி சென்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார், அசாம் ரைபிள் குழுவினருடன் இணைந்து கடத்தப்பட்ட நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த கும்பல், வேறு சிலரையும் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சட்டவிரோதமாக இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டுவதாக கூறப்படும் நிலையில், கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் அசாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

