sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : மார் 16, 2025 11:31 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் தயாராகிறது. சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில், கன்னட ஸ்டார் நடிகர் துனியா விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். துனியா விஜய், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். இவரை பார்ப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன், பெங்களூரு திரும்பி நடிகர் ஆனார். முன்னணி நடிகராக வளர்ந்த பின், ரஜினியை சந்தித்தார். துனியா விஜய் நடித்த படங்களை பார்த்து, ரஜினி மனம் திறந்து பாராட்டியுள்ளார். இவர் நடிப்பில் சூப்பர்ஹிட்டான அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் - 2 படத்தை இயக்குவதால், துனியா விஜய் குஷியுடன் ஒப்புக்கொண்டார்.

ராப்பர் சந்தன் ஷெட்டி - நடிகை நிவேதிதா கவுடா, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர். இனி நல்ல நண்பர்களாக இருப்போம் என, கூறியிருந்தனர். தற்போது திரைக்கு வர தயாராகும், முத்து ராக்ஷசி என்ற படத்தில், இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பட வேலைகள் துவங்கியும், படப்பிடிப்பு தாமதமானது. பன்னரகட்டா சாலையின், வஜ்ரமுனி பண்ணையில் சமீபத்தில் சந்தன் ஷெட்டி, நிவேதிதா கவுடா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் கிளிசரின் போடாமலேயே, நிவேதிதா கண்களில் கண்ணீர் வந்ததாம்.

நடிகை பாக்யஸ்ரீ, கன்னடத்தில் அம்மவ்ர கண்டா உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர். 2010ல் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், 2019ல் சீதாராமா கல்யாணா என்ற படத்தில் நடித்தார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிசியாக நடிக்கிறார். சமீபத்தில் விளையாட்டில் ஈடுபடும் போது, நெற்றியில் காயம் அடைந்தார். நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது. 'பிகல் பால்' என்ற விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டு விளையாடும் போது, பாக்யஸ்ரீக்கு அடிபட்டதாம். இவர் விரைவில் குணமடைய வேண்டும் என, பல நடிகர், நடிகையர் வாழ்த்தினர்.

மங்களூரை சேர்ந்த நடிகை ஸ்வப்னா ஷெட்டிகார், திரையுலகுக்கு வந்த போது, அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிறு, சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. அவர் உடல் பருமனாக இருந்ததே காரணம். இதை உணர்ந்த அவர், உடற்பயிற்சி செய்து, உடல் மெலிந்தார்; நடிப்பு பயிற்சியும் பெற்றார். அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 1990, கிளாந்தா வெற்றி பெற்றன. இவர் நாயகியாக நடித்த ஆறு திரைப்படங்கள், ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. இதில் ராவன் படமும் ஒன்றாகும். படத்தில் அவர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரம்.

நடிகர் தர்ஷன் நாயகனாக நடிக்கும் டெவில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. மிலனா பிரகாஷ் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் ஷர்மிளா மான்ட்ரே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தை படக்குழுவினர் பகிரங்கப்படுத்தவில்லை. படப்பிடிப்பு இடத்தில், தான் உள்ள கேரவான் போட்டோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தர்ஷனுடன் ஷர்மிளா மான்ட்ரே நடிப்பது, இதுவே முதன் முறையல்ல. ஏற்கனவே நவகிரஹா படத்தில் நடித்திருந்தார். தற்போது டெவில் படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

துார்தர்ஷன் திரைப்பட இயக்குநர் சுகேஷ் ஷெட்டி, தற்போது பீட்டர் பட வேலையில் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளது. மடிகேரி மற்றும் பாகமண்டலாவின் அழகான இடங்களில், படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ராஜேஷ் துருவா, ரவிக்ஷா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. முரளிதர் இசை அமைத்துள்ளார். மலையாள திரையுலகின் பிரபல பாடகர் பிரணம் சசி, முதன் முறையாக கன்னடத்துக்கு பாட வந்துள்ளார். இவர் பாடிய பாடல்களும் அற்புதமாக வந்துள்ளன.

மலையாள பாடகர்








      Dinamalar
      Follow us