ADDED : ஜன 06, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால்: வட மாவட்டங்களின், முக்கியமான கோவிலான ஹுலிகெம்மா கோவிலில், 52 நாட்களில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலிக்கப்பட்டுள்ளது.
கொப்பாலின், முனிராபாத் அருகில் உள்ள ஹுலிகெம்மா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். வட மாவட்டங்களின் முக்கியமான கோவிலாகும்.
பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கடந்த 52 நாட்களுக்கு முன்பு, கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. நேற்று முன்தினம் வரை உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், 1 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரத்து 435 ரூபாய் ரொக்கம், 333 கிராம் தங்கம், 11.300 கிலோ வெள்ளிப்பொருட்கள் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.