ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
ADDED : ஆக 22, 2024 11:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அதனால் நாட்டில் 10 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவர்' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த வேலைவாய்ப்பு மற்றும் இணைய வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில், பியூஷ் கோயல் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. இ-காமர்ஸ் தளங்களால் கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம், சில்லறை வர்த்தக்கத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 ஆயிரம் கோடி