இந்தியாவில் முதலீடுகளை அதிகரியுங்கள்; ஜெர்மனி நிறுவனங்களுக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அழைப்பு
இந்தியாவில் முதலீடுகளை அதிகரியுங்கள்; ஜெர்மனி நிறுவனங்களுக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அழைப்பு
ADDED : அக் 23, 2025 09:36 PM

புதுடில்லி: இந்தியாவில் முதலீடுகளை அதிகரியுங்கள் என ஜெர்மனி நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, பியூஷ் கோயல் ஜெர்மன் மிட்டல்ஸ்டாண்ட் (SME) நிறுவனங்கள் மற்றும் இந்திய வணிகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியா வழங்கும் முக்கிய வாய்ப்புகளை பியூஸ் கோயல் எடுத்துரைத்தார். மேலும் இந்திய மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பியூஸ் கோயல் கூறியதாவது: ஜெர்மன் மிட்டல்ஸ்டாண்ட் நிறுவனங்கள் மற்றும் இந்திய வணிகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விவாதத்தில் ஈடுபடுவதில் மகிழ்ச்சி. புதுமை மற்றும் நிலையான உற்பத்தியில் இந்தியா வழங்கும் முக்கிய வாய்ப்புகளை விவரித்தேன்.
ஜெர்மனியின் பொருளாதார மற்றும் எரிசக்தித் துறையின் மத்திய அமைச்சர் கேத்தரினா ரீச்சை பெர்லினில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். இந்தியாவில் முதலீடுகளை அதிகரியுங்கள் என ஜெர்மனி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.