ADDED : செப் 29, 2024 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:மூணாறில் நிலவும் மாறுபட்ட பருவநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
கேரளாவில் ஆண்டு தோறும் செப்டம்பர் இறுதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வரும் என்ற போதும், இந்தாண்டு அக். 15 வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஏற்ப மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழைக்கான முன்னெச்சரிக்கை விடப்பட்டது.
மூணாறில் கடந்த ஒரு வாரமாக காலையில் மேகங்கள் சூழ குளிர், மதியத்திற்கு பின் சற்று மழை, இரவில் குளிர் என மாறுபட்ட பருவநிலை காணப்படுகிறது. அந்த சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.