உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 02, 2026 05:14 PM
ADDED : நவ 02, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
டில்லி எல்லைகளில் நடத்தப்படும் வாகன சோதனை காரணமாக, அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை இணைக்கும் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.
டில்லி – -குருகிராம், டில்லி – -நொய்டா, டில்லி- – காஜியாபாத், டில்லி- – சோனிபட் மற்றும் டில்லி – -நஜப்கர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை -48-ல், சிர்ஹால் சுங்கச்சாவடி அருகே பல கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ராஜோக்ரி, டி.என்.டி., மேம்பாலம், காஜிப்பூர், சிங்கு, திக்ரி மற்றும் பதர்பூர் உள்ளிட்ட இடங்களிலும் வாகன சோதனை தீவிரமாக நடக்கிறது.
