ரூ.5.25 கோடி மோசடி செய்த பெண் மீது குவியும் புகார்கள்
ரூ.5.25 கோடி மோசடி செய்த பெண் மீது குவியும் புகார்கள்
ADDED : ஜன 30, 2025 08:47 PM

கே.ஆர்.புரம்; தொழிலதிபரிடம் 5.25 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேகா மீது, புகார்கள் குவிந்து வருகின்றன.
பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ரேகா, 34. இவர், தொழில் அதிபர் ஒருவரிடம் 5.25 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்தார்.
இந்த வழக்கில் ரேகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு பெண் ஒருவரிடம் ரேகா மோசடி செய்ததும் தெரிந்துள்ளது.
அதாவது, தன்னை வக்கீல் என்று அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தார். வீடு வாங்கி தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் ஒரு கோடி ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் அவர் வீடு வாங்கி கொடுக்கவில்லை.
மேலும், 1 கோடி ரூபாய்க்கு அந்த பெண்ணுக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் காசோலை பணம் இல்லை என்று திரும்ப வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேகா ஜாமினில் வெளியே வந்தார்.
பின், தனியார் நிறுவனம் ஒன்றை துவங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம், பாஸ்போர்ட் வாங்கி தர உதவி செய்வதாக அனைவரையும் நம்ப வைத்தார்.
பலரிடம் இருந்து ரேகா 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தொழிலதிபர் புகார் அளித்த பின், ரேகா மீது மேலும் சிலர் புகார் அளித்து உள்ளனர்.
வரும் நாட்களில் இன்னும் பலர் புகார் அளிக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

