நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
UPDATED : ஜூலை 01, 2024 11:52 AM
ADDED : ஜூலை 01, 2024 11:14 AM

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து பார்லி., வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு பார்லி., கூட்டத்தொடர் இன்று (ஜூலை 1) கூடுகிறது. அதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியினர் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
வெளிநடப்பு
இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தொடரில் இன்று, நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்துமாறு ராகுல் வலியுறுத்தினார். இது பற்றி ராகுல் பேசுகையில், ''பார்லிமென்டில் இருந்து நாட்டுக்கு ஒரு செய்தி பரப்பப்படுகிறது. பார்லிமென்டிற்கு நீட் விவகாரம் முக்கியமானது என்று மாணவர்களுக்கு ஒரு செய்தியை வழங்க விரும்புகிறோம். எனவே, இந்த செய்தியை அனுப்ப இதை விவாதிக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுத்தார். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.