ADDED : ஜன 08, 2024 11:00 PM

பெங்களூரு: 'லோக்சபா தேர்தல் தொடர்பாக நாளை, கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்துகிறார்,'' என, கனரகம், நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில், மூன்று துணை முதல்வர் பதவி விவகாரம் குறித்து கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். என் கருத்தை கட்சியின் நான்கு சுவர்களுக்குள் தெரிவிப்பேன். ஊடகங்களில் கூற மாட்டேன்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, வரும் 10ம் தேதி, கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்துகிறார்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காந்தராஜா அறிக்கையை அமல்படுத்தக்கோரி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சுவாமிகள், முதல்வரை சந்தித்துப் பேசி உள்ளனர்.
அவரின் அறிக்கைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அறிக்கையில் உள்ள சில பிரச்னைகள் குறித்து கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.