தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய காங்., – எம்.பி., மீது வழக்குப் பதிவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய காங்., – எம்.பி., மீது வழக்குப் பதிவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய காங்., – எம்.பி., மீது வழக்குப் பதிவு


UPDATED : அக் 12, 2026 06:41 PM

ADDED : அக் 12, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:41 PM ADDED : அக் 12, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாலியல் குற்றச்சாட்டில் ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி., அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜம் மீது, டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

டில்லி , ஜவகர்லால் நேரு பல்கலையில், சமூக அறிவியல் பள்ளியின் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் , 59. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த இவர், இன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யாகவும் பதவி வகிக்கிறார்.

கடந்த மே மாதம் அகோய்ஜாம் மீது பல்கலை உள்விவகாரக் குழுவிடம், 11 மாணவியர் பாலியல் புகார் அளி த்தனர்.

பாடம் நடத்தும் போது, தவறா க நடந்ததாகவும், ஆபாச மாக பேசியதாகவும், சில மாணவியரை பல்கலை வளாகத்தில் உள்ள தன் வீட் டுக்கு இரவில் வரவழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட் டினர் . தேர்வில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக கூறி, சில மாணவியரை மிரட்டி சீரழித்ததாக மாணவியர் அடுக்கடுக்காக புகார் கூறியிருந்தனர்.

இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பல்கலை வளாகத்தில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சமீபத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம், பல்கலை நிர்வாகத்துக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, பேராசிரியர் அங்கோம்ச்சா பிமோல் மீது பாலியல் புகாரளித்த 11 மாணவியரிடம், பல்கலை உள்விவகாரக் குழு விசாரணை நடத்தியது. சமூக அறிவியல் பள்ளியில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் மீதான புகார் உறுதியானது.

அவருக்கு கடுமையான தண்டனை வழங்க, பல்கலை நிர்வாகத்துக்கு உள்விவகாரக் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் , 9ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பல்கலை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகார் அடிப்படையில், அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் மீது, வசந்த் குஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

இதுகுறித்து அகோய்ஜம் கூறுகையில், “என் மீதான நடவடிக்கை, வேட்டையாடும் செயல். விசாரணைக் குழுவின் முடிவுகளுக்கு பதிலளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us