'எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் காங்.,'
'எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் காங்.,'
ADDED : நவ 07, 2024 01:08 AM

ராம்நகர் : ''சுதந்திரம் கிடைத்த பின்னர், ஓட்டு வங்கிக்காக மட்டுமே எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை பயன்படுத்தி கொள்ளும் காங்கிரசை ஒதுக்கி வைக்க வேண்டும்,'' என மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரின் ஓட்டுகளை பெற, கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சிகளும் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
ராம்நகரில் எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர்களுடன், மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலுவாதி நாராயணசாமி கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து, தேர்தலில் தோற்கடித்தவர்கள் காங்கிரசார். அம்பேத்கரும், காங்கிரசை நம்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமே, அம்பேத்கரை மதிக்கும் கட்சி.
இதற்கு சாட்சியாக, பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை, நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கிய பெருமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது.
சுதந்திரம் கிடைத்த பின், ஓட்டு வங்கிக்காக மட்டுமே எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை பயன்படுத்தி கொள்ளும் காங்கிரசை ஒதுக்கி வைக்க வேண்டும்.
இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நலனுக்காக வழங்க வேண்டிய நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது.
இதை முதல்வர் சித்தராமையாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதை மறக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.