ADDED : ஜன 08, 2024 11:52 PM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு, அதிகார போதையில் ஆட்டம் போட்டு வருகிறது; அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போரை வஞ்சிக்கிறது. மாநிலத்தில் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது.
பசவராஜ் பொம்மை, கர்நாடகா முன்னாள் முதல்வர், பா.ஜ.,
இன்னும் ஓய்வு பெறவில்லை!
வழக்கமாக, 65 - 70 வயதுக்கு பின், சிலர் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், ஒரு சிலர், 80 வயதை தாண்டிய பின்னும் கூட, ஓய்வு பெறாமல் பிடிவாதமாக இருக்கின்றனர். அவர்கள் யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டர்.
அஜித் பவார், மஹாராஷ்டிரா துணை முதல்வர், தேசியவாத காங்.,
மயக்க முடியாது!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி, பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. அவர்களது பொய்க்கு, மக்கள் மயங்க மாட்டர். நாடு முழுதும் பா.ஜ., அலை வீசுகிறது. மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.
விஜயேந்திரா, தலைவர், கர்நாடக மாநில பா.ஜ.,