நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய காங்.,: பிரதமர் மோடி சாடல்
நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய காங்.,: பிரதமர் மோடி சாடல்
UPDATED : ஏப் 04, 2024 02:27 PM
ADDED : ஏப் 04, 2024 01:44 PM

ஜமுய்: ‛‛மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தியது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹாரின் ஜமுய் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: இங்கு கூடியிருப்பவர்களை பார்க்கும் போது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பா.ஜ.,வுக்கும், தே.ஜ.,வுக்கும் ஆதரவாக ஒலிக்கும் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பீஹார் வழிகாட்டியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகு 5 - 6 தலைமுறையாக மாநிலத்திற்கு நீதி வழங்கப்படவில்லை.
காங்கிரசும், ஆர்ஜேடி.,யும் ஆட்சி செய்த போது உலகளவில் நாட்டின் பெயரை கெடுத்தன. வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும், வளர்ச்சி பெற்ற பீஹாரை கட்டமைப்பதே பா.ஜ., தே.ஜ.,வின் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் பற்றி உலக மக்கள் என்ன நினைத்தனர்? காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மற்றும் பலவீனமான நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால், இன்று உலகத்திற்கே இந்தியா வழிகாட்டுகிறது. நம்மை உலகம் கவனிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

