வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கும் காங்., - எம்.பி., சுரேஷ் ஆதரவாளர்கள்
வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கும் காங்., - எம்.பி., சுரேஷ் ஆதரவாளர்கள்
ADDED : பிப் 24, 2024 04:32 AM

பெங்களூரு : பெங்களூரு ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுரேஷ். லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வருகிறார். ஆனால் அவரை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., திட்டம் தீட்டி வருகிறது.
வாய்ப்பு
டாக்டர் மஞ்சுநாத், முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் என, மூன்று பேரில் யாராவது ஒருவர் சுரேஷுக்கு எதிராக போட்டியிட வாய்ப்பு உள்ளது.
சுரேஷ் இம்முறை வெற்றி பெறுவது எளிது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சுதாரித்து கொண்ட அவர், தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குக்கர் வினியோகம் செய்ய, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி சுரேஷின் ஆதரவாளர்கள், குனிகல் தொகுதி வேட்பாளர்களுக்கு குக்கர் வழங்கி வருகின்றனர். அந்த குக்கரின் அட்டையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷ், குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத்தின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
நாட்டை பிரிக்க சதி
குக்கர் இருக்கும் பாக்ஸ்களை, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ., 'நாட்டை பிரிக்க சதி செய்த, காங்கிரஸ் எம்.பி., சுரேஷுக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தோல்வி பயம் வந்து விட்டது.
'போக்கிரிதனத்துடன் கொஞ்சம் வளர்ச்சி பணியும் செய்திருந்தால், நன்றாக இருக்கும். ஒவ்வொரு முறையும் போக்கிரிதனத்தால் வெற்றி பெறுவது, கனகபுராவில் தெரிந்தது. வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகிக்கும் எம்.பி., சுரேஷ் மீது, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.