ADDED : நவ 08, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் கிருஷ்ண செயில், 59. இவர், 8 லட்சம் டன் இரும்புத்தாதுவை, பல்லாரியில் இருந்து பெலகேரி துறைமுகத்துக்கு, 2010ல் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் அவருக்கு அப்போது, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, இந்த விவகாரத்தி ல் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், கோவாவில் செயிலுக்கு சொந்தமான, 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இ தன் தற்போதைய மதிப்பு, 64 கோடி ரூபாய்.

