சவால் நிறைந்த சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி கருத்து
சவால் நிறைந்த சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி கருத்து
ADDED : டிச 14, 2024 01:55 AM
புதுடில்லி:“டில்லி சட்டசபைத் தேர்தல், தேசிய தலைநகரில் வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான போராட்டம்,” என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிழக்கு டில்லி எம்.பி.,யுமான சந்தீப் தீட்சித் கூறினார்.
சந்தீப் தீட்சித், நிருபர்களிடம்கூறியதாவது:
எல்லா தேர்தலுமே சவால் நிறைந்ததுதான். புதுடில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் போட்டியிடுவாரா இல்லையா என்பதை ஆம் ஆத்மி கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், டில்லி மக்கள் அப்போதைய புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்தனர். பொய் பிரசாரத்தால் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறினோம்.
ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பின், ஆம் ஆத்மி அரசிடம் வளர்ச்சிப் பணி, தூய்மையான அரசியல் ஆகியவை இல்லை என்பதை டில்லி மக்கள் உணர்ந்து விட்டனர்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வளர்ந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தும், 7 முதல் 10 ஆண்டுகளில் அதை அழித்து விட்டது.
டில்லியில் வளர்ச்சியை ஏற்படுத்த, மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கும் அரசை மீண்டும் கொண்டு வருவதற்கான போராட்டமாகத்தான் இந்த சட்டசபைத் தேர்தல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் பிப்ரவரியில் நடக்கும் டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் நேற்று முன் தினம் வெளியிட்டது.
பட்லி - தேவேந்திர யாதவ், சவுத்ரி அனில் குமார் - பட்பர்கஞ்ச், ராகினி நாயக் - வஜீர்பூர், ஆதர்ஷ் சாஸ்திரி - துவாரகா ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

